உள்ளூர் செய்திகள்

சுங்குவார் சத்திரம் அருகே வீடு புகுந்து கொள்ளையடித்த வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி

Published On 2022-07-29 14:27 IST   |   Update On 2022-07-29 14:27:00 IST
  • சுங்குவார்சத்திரம் அடுத்த பொடவூர் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி.
  • கணவன்- மனைவி இருவரும் திரும்பி வந்த போது வீட்டின் கதவு உள்பக்கம் தாழ்போட்டு மூடி இருந்தது.

ஸ்ரீபெரும்புதூர்:

சுங்குவார்சத்திரம் அடுத்த பொடவூர் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் வீட்டின் கதவை பூட்டாமல் மூடி வைத்துவிட்டு மனைவியுடன் அருகில் உள்ள ரேசன் கடைக்கு சென்றார்.

சிறிது நேரம் கழித்து கணவன்- மனைவி இருவரும் திரும்பி வந்த போது வீட்டின் கதவு உள்பக்கம் தாழ்போட்டு மூடி இருந்தது. மேலும் வீட்டின் உள்ளே மர்ம வாலிபர் ஒருவர் பொருட்களை கொள்ளையடித்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சிஅடைந்து கூச்சலிட்டனர்.

சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஏராளமானோர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் வீடு புகுந்து திருடிய வாலிபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவனை சுங்குவார்சத்திரம் போலீசில் ஒப்படைத்தனர்.

இன்ஸ்பெக்டர் பரந்தாமன் விசாரணை நடத்தினார். இதில் பிடிபட்ட வாலிபர் ஆவடி வீராபுரம் பகுதியை சேர்ந்த தனுஷ் (23) என்பது தெரிந்தது. அவன் மீது ஏற்கனவே பல்வேறு போலீஸ் நிலையத்தில் வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. கைதான தனுசை போலீசார் ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி காஞ்சிபுரம் கிளை சிறையில் அடைததனர்.

Tags:    

Similar News