உள்ளூர் செய்திகள்
விளம்பர பேனர் வைத்தபோது மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி
தாம்பரம் அடுத்த ராஜகீழ்ப்பாக்கம் ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் குமார்.
தாம்பரம்:
தாம்பரம் அடுத்த ராஜகீழ்ப்பாக்கம் ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் குமார் (வயது45). கொத்தனார். இவர் இன்று காலை காமராஜபுரம் பகுதியில் உள்ள தனியார் உள்ளாடைகள் விற்பனை செய்யும் கடையின் மேல் தளத்தில் விளம்பர பேனரை வைக்க முயன்றார். அப்போது அருகில் சென்ற உயர் அழுத்த மின்கம்பியில் விளம்பர பேனர் உரசியது. இதில் மின்சாரம் தாக்கியதில் குமார் பலியானார். உடன் இருந்த மேலும் 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.