உள்ளூர் செய்திகள்

அகவிலைப்படி உயர்வு: நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள்-அலுவலர்கள் சங்கம் முதலமைச்சருக்கு நன்றி

Published On 2023-10-27 12:32 IST   |   Update On 2023-10-27 12:32:00 IST
  • 42 சதவீத அகவிலைப்படி 1.07.2023 முதல் 46 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
  • நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

பூந்தமல்லி:

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் 42 சதவீத அகவிலைப்படி 1.07.2023 முதல் 46 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனையடுத்து அகவிலைப்படி உயர்வை உயர்த்தி ஆணை பிறப்பித்த முதலமைச்சருக்கு தமிழ்நாடு நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஆல்பர்ட் அருள்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காதில் இன்பத் தேன் வந்து பாய்வது போன்ற ஒரு அறிவிப்பினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். கடும் நிதி நெருக்கடியான சூழ்நிலையிலும் முதலமைச்சர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள், மற்றும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் 4 சதவீத அகவிலைப்படியினை 42 சதவீதத்திலிருந்து 46 சதவீதமாக உயர்த்தி அறிவித்து ஆணை பிறப்பித்துள்ளதற்கு தமிழ்நாடு நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் துப்புரவு அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் முதலமைச்சர் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News