உள்ளூர் செய்திகள்
பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பழைய மாணவர்கள் சந்திப்பு
- பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது.
- கடந்த காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை தெரிவித்து சிரித்து மகிழ்ந்தனர்.
பொன்னேரி:
பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1991-93 ம் ஆண்டு வரை படித்த பிளஸ் 1 பிளஸ் 2 பள்ளி மாணவர்கள் சுதந்திர தினத்தை முன்னிட்டு பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது.
இதில் ஒருங்கிணைப்பாளர் ந.சபஸ்டின் தலைமையில் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு ஒருவரை ஒருவர் சந்தித்து அறிமுகத்துடன் முன்னாள் பள்ளியில் நடைபெற்ற சுவாரசியங்களை ஒருவருடன் ஒருவர் பகிர்ந்து கொண்டு ஆசிரியர்களுடன் மாணவர்களுடன் கடந்த காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை தெரிவித்து சிரித்து மகிழ்ந்தனர். பின்னர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு இனிப்பு வழங்கி கேக் வெட்டி கொண்டாடினர். இதில் மாணவர்கள் பாலகிருஷ்ணன், சாமிநாதன் வெங்கடேசன், பாபு, ஜெய்கணேஷ், சீனிவாசன்,செந்தில்குமார், ரகுநாத, சுதாகர்,மணிமாறன்,ரமேஷ்,பாஸ்கர, ரகு ஆகியோர்கள் கலந்து கொண்டனர்