உள்ளூர் செய்திகள்

ப்ரணவம் பரதநாட்டிய பள்ளியின் 10ம் ஆண்டு விழா- மாணவிகள் அரங்கேற்றிய கண்கவர் நடனங்கள்

Published On 2023-02-07 16:47 IST   |   Update On 2023-02-07 16:47:00 IST
  • ப்ரணவம் பரதநாட்டிய பள்ளியை சேர்ந்த 65க்கும் மேற்பட்ட மாணவிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று கண்கவர் நடனமாடினர்.
  • நிகழ்ச்சியை சிறப்பிக்க பிரபல தனியார் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் சர்வோதயா ராமலிங்கம் தலைமை ஏற்று சிறப்புரையாற்றினார்.

சென்னை வில்லிவாக்கத்தில் ப்ரணவம் பரதநாட்டிய பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 4 வயது முதல் ஏராளமான மாணவிகள் பரத நாட்டியம் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் இப்பள்ளியின் 10ம் ஆண்டு விழா நேற்று முன்தினம் (5-2-2023) நடைபெற்றது. கீழ்ப்பாக்கத்தில் உள்ள பாரதீய வித்யாபவன் உள் அரங்கில் ப்ரணவம் பரதநாட்டிய பள்ளியின் இயக்குனர் ஸ்ரீராம் மற்றும் அவரது மனைவியும், நடன ஆசிரியருமான நந்திதா ஆகியோரின் ஏற்பாட்டில் 10ம் ஆண்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், ப்ரணவம் பரதநாட்டிய பள்ளியை சேர்ந்த 65க்கும் மேற்பட்ட மாணவிகள் பல்வேறு கருப்பொருளின் கீழ் கண்கவர் பரத நாட்டிய நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். 9 மாணவிகளின் சலங்கை பூஜை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

மேலும், நிகழ்ச்சியை சிறப்பிக்க பிரபல தனியார் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் சர்வோதயா ராமலிங்கம் தலைமை ஏற்று சிறப்புரையாற்றினார். சிங்காரம்பிள்ளை பள்ளியின் தாளாளர் கைலாஷ், திரைப்பட டப்பிங் கலைஞர் கோதண்டம் ஆகியோர் தலைமை விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.

பின்னர், நடனம் ஆடிய மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News