உள்ளூர் செய்திகள்

சவுகார்பேட்டை வணிக வளாகத்தில் ரூ.20 லட்சம் பணத்துடன் வாலிபர் சிக்கினார்- ஹவாலா பணமா? போலீஸ் விசாரணை

Published On 2023-02-05 14:52 IST   |   Update On 2023-02-05 14:52:00 IST
  • சவுகார்பேட்டை பெருமாள் முதலி தெருவை சேர்ந்த அவர் தனது தோளில் பை ஒன்றையும் மாட்டி இருந்தார்.
  • போலீசார் சோதனை நடத்தினர். அதில் கட்டுக்கட்டாக ரூ.20 லட்சம் பணம் இருந்தது.

சென்னை:

சென்னை சவுகார்பேட்டை மின்ட் தெருவில் உள்ள வணிக வளாகத்தில் சந்தேகத்துக்கிடமாக வாலிபர் ஒருவர் நிற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து யானைக் கவுனி போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ், சப்- இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் விரைந்து சென்று வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவரது பெயர் ஷொரூப் (20) என்பது தெரிய வந்தது.

சவுகார்பேட்டை பெருமாள் முதலி தெருவை சேர்ந்த அவர் தனது தோளில் பை ஒன்றையும் மாட்டி இருந்தார். அதை கைப்பற்றி போலீசார் சோதனை நடத்தினர். அதில் கட்டுக்கட்டாக ரூ.20 லட்சம் பணம் இருந்தது.

அதனை பறிமுதல் செய்த போலீசார் பணம் எப்படி வந்தது? என்பது பற்றி விசாரணை நடத்தினர். ஆனால் வாலிபரால் பணத்துக்கு கணக்குகாட்ட முடியவில்லை.

இதையடுத்து ஹவாலா பணமா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வருமான வரி துறையினரிடம் ரூ.20 லட்சம் பணம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News