உள்ளூர் செய்திகள்

தேன்கனிகோட்டை அருகே தோட்டத்திற்கு காவலுக்குச் சென்ற விவசாயியை தூக்கி வீசிய ஒற்றை யானை

Published On 2022-12-23 13:28 IST   |   Update On 2022-12-23 13:28:00 IST
  • யானை பசப்பாவை துரத்திக் கொண்டு துதிக்கையால் தூக்கி வீசி உள்ளது.
  • வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டை அருகே உள்ள மரகட்டா கிராமத்தை சேர்ந்தவர் சித்தூரப்பா என்ற பசப்பா (வயது60). இவர் தனது தோட்டத்தில் உள்ள ராகிபயிர்களை அறுவடை செய்து களத்தில் குவித்துள்ளார்.

அதனால் நேற்றிரவு காவலுக்கு சென்று மரத்தின் மேல் அமைத்திருந்த குடிசையில் அமர்ந்து காவலுக்கு இருந்துள்ளார். அதிகாலை மரத்திலிருந்து கீழே இறங்கி வந்துள்ளார். அப்போது அங்கு ஒற்றை யானை நின்று கொண்டிருந்ததை பார்த்து பசப்பா ஒடி உள்ளார்.

அந்த யானை பசப்பாவை துரத்திக் கொண்டு துதிக்கையால் தூக்கி வீசி உள்ளது. இதில் கீழே விழுந்து கை, இடுப்பு, பகுதியில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News