உள்ளூர் செய்திகள்

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு- கலெக்டர் தகவல்

Published On 2022-07-06 15:18 IST   |   Update On 2022-07-06 15:18:00 IST
  • மாற்றுத்திறனாளிகளை பொறுத்தமட்டில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து ஓராண்டுமுடித்திருந்தால் போதுமானது.
  • செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டவேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 01.07.2022 உடன் தொடங்கும் காலாண்டிற்குபடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து, வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பத்தாம்வகுப்பு (தோல்வி), பத்தாம்வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கும்மேலான கல்வித்தகுதிகளை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவினைத்தொடர்ந்து புதுப்பித்து, 30.06.2022 அன்றைய நிலையில் ஐந்தாண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு, தமிழக அரசால் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளை பொறுத்தமட்டில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து ஓராண்டுமுடித்திருந்தால் போதுமானது.

பொறியியல், மருத்துவம், கால்நடைமருத்துவம், விவசாயம், சட்டம், பி.எஸ்.சி நர்சிங் போன்ற தொழிற்பட்டப்படிப்புகள் முடித்தவர்கள் வேலைவாய்ப்பற்றோர்உதவித்தொகைதிட்டத்தின்கீழ்பயன்பெறமுடியாது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம்ரூ.72,ஆயிரத்துக்குக்குமிகாமல் இருத்தல்வேண்டும். இந்த. உதவித்தொகையினைப். பெறுவதற்கு தாழ்த்தப்பட்ட. மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 30.06.2022 அன்றைய நிலையில் 45 வயதிற்குள்ளும், இதரஇனத்தைசார்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும்.

உதவித்தொகை விண்ணப்பப்படிவம் பெறவிரும்பும் மனுதாரர்கள், தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை ஆதாரமாக காண்பித்து, செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மனுதாரர்கள் செப்டம்பர்10-ம்தேதி வரை அனைத்து அலுவலகவேலை நாட்களிலும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும்மையத்தில், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டப்பிரிவில், அனைத்து. அசல்கல்விசான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு துவக்கி புத்தகத்துடன் நேரில் ஆஜராகிசமர்ப்பிக்கலாம் என அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்தன.

Similar News