உள்ளூர் செய்திகள்
ஊட்டி நகருக்குள் நள்ளிரவில் புகுந்த கரடி
- நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரா பகுதியை ஒட்டி அடர்ந்த தேயிலை தோட்டம் உள்ளது.
- ஊட்டியின் மையப்பகுதியில் கரடி நடமாடியது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரா பகுதியை ஒட்டி அடர்ந்த தேயிலை தோட்டம் உள்ளது.
இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து தேயிலை தோட்டம் வழியாக வந்த கரடி ஒன்று ஊட்டியின் மையப்பகுதியான புது அக்ரஹாரம் பகுதியில் நடமாடியது பொதுமக்களுக்கு அதிர்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த கரடியை கண்டு அங்கிருந்த நாய்கள் பயந்து ஓடின.
கரடி அங்கும் இங்குமாக சுற்றி திரிந்த காட்சிகள் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது.
ஊட்டியின் மையப்பகுதியில் கரடி நடமாடியது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.