உள்ளூர் செய்திகள்

ஒரே குடும்பத்தில் 6 பேர் சாவு- கொலைக்கான காரணம் குறித்து உயிர் தப்பிய சிறுமியிடம் போலீசார் விசாரணை

Published On 2022-12-14 11:57 IST   |   Update On 2022-12-14 11:57:00 IST
  • பூமிகாவுக்கு வேலூர் அடுக்கம்றை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
  • பழனி மற்றும் அவரது மனைவி குழந்தைகள் உட்பட 6 பேர் உடல்கள் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அருகே உள்ள கீழ்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் பழனி (வயது 40) விவசாயி. இவரது மனைவி வள்ளி (37), மகள்கள் திரிஷா 15), மோனிஷா (14), பூமிகா (9), சிவசக்தி (7) மகன் தனுசு (4) பழனி ஒரவந்தவாடி மதுரா மோட்டூர் கிராமத்தில் கொரட்டாம்பட்டு கிராமத்தில் குத்தகைக்கு விவசாயம் செய்து வந்தார். அந்த நிலத்தின் ஒரு பகுதியில் குடிசை வீடு ஒன்று உள்ளது. அதில் சுமார் 4 ஆண்டுகளாக தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

நேற்று அதிகாலை பழனி அவரது மனைவி வள்ளி, மகள்கள் திரிஷா, மோனிஷா, சிவசக்தி, மகன் தனுசு ஆகியோரை வெட்டி கொலை செய்தார்.

அவருடைய மகள் பூமிகா என்பவர் மட்டும் வெட்டு காயங்களுடன் உயிர் தப்பினார். பின்னர் பழனி வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

பூமிகாவுக்கு வேலூர் அடுக்கம்றை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பழனி மற்றும் அவரது மனைவி குழந்தைகள் உட்பட 6 பேர் உடல்கள் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

கீழ்குப்பம் கிராமத்தில் பழனி மற்றும் அவரது மனைவி குழந்தைகளை இன்று அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர்.

பழனியின் மனைவி வள்ளி வீட்டில் பரிகார பூஜை செய்ய வேண்டும் என்பதற்காக அவரது உறவினர்களிடம் ரூ.10 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார். பரிகார பூஜையின் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கிலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக பழனியின் மகள் பூமிகாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News