உள்ளூர் செய்திகள்

சேலத்தில் காற்றுடன் கோடை மழை- பொதுமக்கள் நிம்மதி

Published On 2023-04-23 07:15 GMT   |   Update On 2023-04-23 07:15 GMT
  • அண்ணா பூங்கா, பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
  • மழையால் வெப்பம் தணிந்து இரவில் குளிர்ந்த சூழல் நிலவியதால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடந்த வாரம் 40.8 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவானது. இது 105.5 டிகிரி பாரன்ஹீட் ஆகும். மாவட்டத்தில், 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் பதிவாகும் வெயிலால் வாகன ஓட்டிகள், மக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். அனல் காற்றால், சாலையில் செல்லவே மக்கள் தயங்கினர். மாலையிலும் வெயில் தாக்கம் இருந்தது. இரவில் புழுக்கத்தால் தூங்க முடியாமல் மக்கள் சிரமப்பட்டனர்.

மேலும் நேற்று 40.4 டிகிரி செல்சியஸ், வெப்பம் பதிவானது. இது 104.6 டிகிரி பாரன்ஹீட் ஆகும்.

இந்நிலையில் இரவு 9 மணிக்கு, திடீரென சேலத்தில் கோடை மழை கொட்டியது. சேலம் கலெக்டர் அலுவலகம் 4 ரோடு, அண்ணா பூங்கா, பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி சென்றனர். முக்கிய சாலைகளில் ஆங்காங்கே போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. இருந்த போதும் மழையால் வெப்பம் தணிந்து இரவில் குளிர்ந்த சூழல் நிலவியதால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

Tags:    

Similar News