உள்ளூர் செய்திகள்

வடமதுரை அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான கோழிகள் பலி

Published On 2023-08-15 08:00 GMT   |   Update On 2023-08-15 08:00 GMT
  • நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
  • விபத்தில் சிக்கிய வாகனம் மற்றும் கோழிகளை அப்புறப்படுத்தி போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

வடமதுரை:

திருச்சியை சேர்ந்த பிலால்முகமது மகன் ராஜா (வயது25). இவர் சொந்தமாக சரக்கு வாகனம் வைத்து ஓட்டி வருகிறார். இவர் திருச்சியில் இருந்து வத்தலக்குண்டுவிற்கு கோழிகளை ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்தார். அவருடன் லோடுமேன்களாக திருச்சியை சேர்ந்த சபீர்முகமது (20), திருவெறும்பூரை சேர்ந்த லோகநாதன் ஆகியோரும் வந்தனர்.

திண்டுக்கல்-திருச்சி ரோடு மூணாண்டிபட்டி அருகே இன்று காலை வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பின்பக்க டயர் வெடித்து வேன் கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த 3 பேரும் படுகாயம் அடைந்தனர். மேலும் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான கோழிகளும் உடல் நசுங்கி பலியானது. அப்போது நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் சிக்கிய வாகனம் மற்றும் கோழிகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

இன்று அதிகாலை நடந்த இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பின்னர் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது.

Tags:    

Similar News