உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

சிவகங்கை மாவட்டத்தில் ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.24½ லட்சம் பறிமுதல்- அரசு கருவூலத்தில் ஒப்படைப்பு

Published On 2024-03-27 03:52 GMT   |   Update On 2024-03-27 03:52 GMT
  • மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், பொதுமக்கள் உரிய ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரொக்கம் கொண்டு செல்வதை தவிர்த்திட வேண்டும்.

சிவகங்கை:

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் பண பட்டுவாடாவை தடுக்க தேர்தல் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன்படி மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இதுவரை மட்டும் மாவட்டத்தில் ரூ.24½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 நடைபெறுவதை முன்னிட்டு, சிவகங்கை மக்களவை தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினரால், நேற்று (26.03.2024) வரை ரொக்கம் ரூ.24 லட்சத்து 47ஆயிரத்து 900 உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்டதாக கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டு தொடர்புடைய கருவூலங்களில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், பொதுமக்கள் உரிய ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரொக்கம் கொண்டு செல்வதை தவிர்த்திட வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News