உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் அருகே கொள்ளையன் கைது

Published On 2023-02-13 12:44 IST   |   Update On 2023-02-13 12:44:00 IST
  • கடந்த 7-ந்தேதி அலுவலகத்தின் பூட்டை உடைத்து ரூ.75 ஆயிரம் கொள்ளை போனது.
  • கடம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் விடையூர் காரணி பகுதியைச் சேர்ந்தவர் வசந்த குமார். இவர் கடம்பத்தூர் ராஜாஜி சாலையில் பணம் பரிமாற்றம் செய்யும் அலுவலகம் நடத்தி வருகிறார்.

கடந்த 7-ந்தேதி இந்த அலுவலகத்தின் பூட்டை உடைத்து ரூ.75 ஆயிரம் கொள்ளை போனது. இது தொடர்பாக கடம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமிரா காட்சியை வைத்து கொள்ளையில் ஈடுபட்ட பரங்கிமலை, மகாலட்சுமி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கவுதமனை (22) கைது செய்தனர்.

Tags:    

Similar News