உள்ளூர் செய்திகள்

கடலூரில் விடிய விடிய பெய்த மழை

Published On 2022-11-11 09:28 IST   |   Update On 2022-11-11 09:28:00 IST
  • தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளானார்கள்.
  • தொடர் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே இன்று முதல் (11-ந்தேதி) கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது.

தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளானார்கள். தொடர் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, மரக்காணம், திண்டிவனம், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளிலும் விடிய விடிய கனமழை நீடித்தது.

இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News