உள்ளூர் செய்திகள்

கவுன்சிலர்கள் கூட்டம்


தொற்று நோய் பரவுவதை தடுக்க கழிவுநீர் கால்வாய்களை கான்கிரீட் பலகை கொண்டு மூட வேண்டும்- கவுன்சிலர்கள் வற்புறுத்தல்

Published On 2022-07-02 12:44 IST   |   Update On 2022-07-02 12:44:00 IST
  • அனைத்து தெருக்களிலும் கொசு மருந்து தெளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
  • அனைத்து கவுன்சிலர்களின் கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும்.

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் மன்ற கூடத்தில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் குமரவேல், செயல் அலுவலர் மாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அ.தி.மு.க. கவுன்சிலர் அருணாச்சலம் பேசுகையில், "தன் வார்டில் உள்ள அனைத்து தெருக்களிலும் பிளீச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.

மற்றொரு அ.தி.மு.க. கவுன்சிலர் ஆனந்தி பேசுகையில், "அனைத்து தெரு விளக்குகளும் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார். தி.மு.க. கவுன்சிலர் வெங்கடேசன் பேசுகையில், "செட்டித்தெரு இருளர் காலனியில் குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும், அனைத்து தெருக்களிலும் கொசு மருந்து தெளிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.

தி.மு.க. கவுன்சிலர் கோகுலகிருஷ்ணன் பேசுகையில், "அங்காளம்மன் கோவில் தெருவில் திறந்த வெளி கழிவுநீர் கால்வாய் உள்ளதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகையால் திறந்தவெளி கால்வாய்களுக்கு கான்கிரீட் பலகைகளை கொண்டு மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.

தி.மு.க. கவுன்சிலர் கோல்டு மணி பேசுகையில், "தன் வார்டில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார். தி.மு.க. கவுன்சிலர் சுமலதா நரேஷ் பேசும்போது, "தன் வார்டில் கூடுதலாக தெரு விளக்குகள் அமைக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

தி.மு.க. உறுப்பினர்கள் திரிபுரசுந்தரி, அபிராமி, இந்துமதி, கல்பனா பார்த்திபன், சமீமாரஹீம் ஆகியோர் பேசும்போது, "தினக்கூலி அடிப்படையில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் அனைத்து வார்டுகளிலும் தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும்" என்று கேட்டுக் கொண்டனர். இப்படி அனைத்து வார்டு கவுன்சிலர்கள் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். விரைவில் நிறைவேற்றப்படும்

இதற்கு பதில் அளித்து பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத், துணை தலைவர் குமரவேல் பேசிய தாவது:-

அனைத்து கவுன்சிலர்களின் கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும். மேலும் தமிழ்நாடு அரசு தற்போது நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. நிதிநிலை சீரடைந்ததும் அரசிடம் கூடுதல் நிதி பெற்று ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

முடிவில் பங்கஜம் நன்றி கூறினார்.

Tags:    

Similar News