உள்ளூர் செய்திகள்

தாம்பரம் பகுதியில் மழை வெள்ள பாதிப்பை தடுக்க இரும்புலியூர்-பீர்க்கன்கரணை ஏரி உபரிநீரை அடையாறு ஆற்றில் இணைக்க கால்வாய்

Published On 2023-07-05 17:43 IST   |   Update On 2023-07-05 17:43:00 IST
  • அரசின் அனுமதி கிடைத்ததும் பணிகள் உடனடியாக தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
  • திட்டப்பணி ரூ.80 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவ மழைக்கு முன்னர் இந்த பணிகளை தொடங்க அரசிடம் அனுமதி கோரப்பட்டு உள்ளது.

தாம்பரம்:

சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு பலத்த மழை பெய்த போது தாம்பரம், முடிச்சூர், பெருங்களத்தூர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஏரிகளில் இருந்து வெளியேறிய தண்ணீர் குடியிருப்புகளை சூழ்ந்து நின்றது.

இதைத் தொடர்ந்து புறநகர் பகுதிகளில் மழை வெள்ள தடுப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வந்தனர். மேலும் அடயாறு ஆற்றின் கரையை அகலப்படுத்தி உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் இரும்புலியூர், பீர்க்கன்கரணை ஏரிகளில் இருந்து வெளியே றும் உபரி நீரை அடையாறு ஆற்றுக்கு திருப்பி விடும் வகையில் கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால் தாம்பரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் வெள்ள பாதிப்பு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீரை கால்வாய் அமைத்து முடிச்சூர் சந்திப்பு வரை கொண்டு சென்று அடையாறு ஆற்றில் கலக்க முடிவு செய்து உள்ளனர். இதற்காக முடிச்சூர் சந்திப்பு வரை சுமார் 2 கி.மீட்டர் தூரத்துக்கு கால்வாய் அமைக்க நீர் வளத்துறை திட்டமிட்டு உள்ளது.

இதற்கான திட்டப்பணி ரூ.80 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவ மழைக்கு முன்னர் இந்த பணிகளை தொடங்க அரசிடம் அனுமதி கோரப்பட்டு உள்ளது. அரசின் அனுமதி கிடைத்ததும் பணிகள் உடனடியாக தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இரும்புலியூர், பீர்க்கன்கரணை ஏரிகளின் உபரி நீரை அடையாறு ஆற்றில் இணைக்கும் வகையில் முடிச்சூர் சந்திப்பு வரை சுமார்2 கி.மீட்டர் தூரத்துக்கு கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. தர்காஸ் சாலை அருகே அடையாறு ஆற்றில் இந்த உபரி நீர் சேரும். 1,200 கன அடி தண்ணீர் செல்லும் வகையில் இது அமைக்கப்படும்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை வெள்ளப் பேரிடர் தடுப்பு குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதன் மூலம் தாம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் வெள்ளப் பெருக்கு குறையும் என்று எதிர் பார்க்கிறோம். மேலும் வெள்ளப் பெருக்கை தடுக்கும் வகையில் கால்வாயின் சில பகுதிகளில் வெள்ள தடுப்பு சுவர்கள் கட்டவும் திட்ட மிடப்பட்டு இருக்கிறது.

வடகிழக்கு பருவ மழைக்கு முன்னர் அவசர கால பணியாக இந்த திட்டத்துக்கு அரசின் அனுமதி கோரப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News