உள்ளூர் செய்திகள்

பொன்னேரியில் கிணற்றில் விழுந்து தத்தளித்த தெரு நாய்கள்- தீயணைப்பு படையினர் மீட்டனர்

Published On 2023-03-18 13:14 IST   |   Update On 2023-03-18 13:14:00 IST
  • கிணற்றில் இருந்து இரவு முழுவதும் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது.
  • பொதுமக்கள் சென்று பார்த்த போது கிணற்றில் நாய்கள் தத்தளித்து கொண்டிருந்தன.

பொன்னேரி சங்கர்நகர் ரெயில்வே சாலை குடியிருப்பு அருகில் காலியாக உள்ள பிளாட்டில் 10 அடி ஆழமுள்ள சரியாக மூடப்படாத கிணறு உள்ளது. கிணற்றில் இருந்து இரவு முழுவதும் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. காலையில் பொதுமக்கள் சென்று பார்த்த போது கிணற்றில் நாய்கள் தத்தளித்து கொண்டிருந்தன. பொன்னேரி தீயணைப்பு துறையினர் வந்து பார்த்த போது 3 நாய்கள் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருப்பது தெரிய வந்தது. பின்னர் பலகையில் கயிறு கட்டி ஏணி மூலமாக நாய்களை பத்திரமாக மீட்டனர்.

Similar News