உள்ளூர் செய்திகள்
பொன்னேரி அருகே கர்ப்பிணி பெண் மாயம்
- கடந்த சில நாட்களுக்கு முன்பு நந்தினி திருவேங்கடபுரத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.
- அதிகாலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற நந்தினி பின்னர் திரும்பி வரவில்லை.
அயனாவரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி நந்தினி. 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த சில நாட்களுக்கு முன்பு நந்தினி பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.
இந்த நிலையில் அதிகாலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற நந்தினி பின்னர் திரும்பி வரவில்லை. அவரை பொன்னேரி போலீசார் தேடிவருகிறார்கள்.