உள்ளூர் செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

Published On 2023-04-04 11:33 IST   |   Update On 2023-04-04 11:33:00 IST
  • மர்ம கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகை, வெள்ளிப் பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர்.
  • கவரப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பொன்னேரியை அடுத்த பஞ்செட்டி ஜி.என்.டி. சாலையில் வசித்து வருபவர் பொன்ராஜ். ஸ்ரீபெரும்புதூர் தனியார் பள்ளியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.

இதனை நோட்ட மிட்ட மர்ம கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 5 1/2 பவுன் நகை, வெள்ளிப் பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து கவரப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News