பொங்கல் கொண்டாட்டத்துக்கு செல்வதால் ஆத்தூர் சுங்கச்சாவடியில் நீண்ட தூரம் காத்து நின்ற வாகனங்கள்- போக்குவரத்து பாதிப்பு
- பொங்கல் திருநாளை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அதிக அளவில் வாகனங்கள் செல்கின்றன.
- செங்கல்பட்டு மாவட்டத்தின் எல்லையான ஆத்தூர் சுங்கச்சாவடியில் கண்ணுக்கெட்டும் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன.
மதுராந்தகம்:
பொங்கல் திருநாளை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அதிக அளவில் வாகனங்கள் செல்கின்றன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 4 நாட்கள் அரசு விடுமுறை என்பதால் இன்று மாலையில் இருந்தே தங்கள் சொந்த ஊருக்கு பொங்கல் திருநாளை கொண்டாடுவதற்காக பொதுமக்கள் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்கின்றனர்.
இதனால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புறப்பட்டு செல்கின்ற கார்கள் இருசக்கர வாகனங்கள் அரசு பேருந்துகள் என ஒன்றன்பின் ஒன்றாக படையெடுத்து செல்கின்றன.
செங்கல்பட்டு மாவட்டத்தின் எல்லையான ஆத்தூர் சுங்கச்சாவடியில் கண்ணுக்கெட்டும் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன. இன்று மாலை முதல் அதிகப்படியான வாகனங்கள் வருவதற்கான வாய்ப்பு இருப்பதால் கூடுதலான கவுண்டர்கள் திறக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
எனவே போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.