உள்ளூர் செய்திகள்

கரும்பு தோப்புக்கு அழைத்து சென்று பெண்ணை செல்போனில் படம் எடுக்க முயன்ற கும்பல் 3 பேர் மீது வழக்கு

Published On 2022-10-16 16:52 IST   |   Update On 2022-10-16 16:52:00 IST
  • வாலிபர் ஒருவர் பெண்ணுக்கு லிப்ட் தருவதாக கூறி இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றார்.
  • திடீரென்று அந்த வாலிபர் வாழப்பட்டு பகுதியில் உள்ள கரும்புத்தோப்புக்குள் அழைத்து சென்றுள்ளார்.

கடலூர்:

கடலூர் அருகே பில்லாலி தொட்டி சேர்ந்தவர் 34 வயது பெண். இவர் பண்ருட்டி ராசாப்பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு வர வேண்டி அந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த வாலிபர் ஒருவர் பெண்ணுக்கு லிப்ட் தருவதாக கூறி இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றார். அப்போது திடீரென்று அந்த வாலிபர் வாழப்பட்டு பகுதியில் உள்ள கரும்புத்தோப்புக்குள் அழைத்து சென்றுள்ளார். ஏற்கனவே அங்கு 2 பேர் நின்று கொண்டிருந்தனர்.

இதனை தொடர்ந்து பெண்ணை 3 பேர் சேர்ந்து தவறாக நடக்க முயன்று, செல்போனில் படம் பிடித்து உள்ளனர். அதிர்ச்சி அடைந்த பெண் அலறினார். அப்போது அந்த 3 பேரும் தப்பி ஓடினார்கள். பின்னர் அந்த பெண் அங்கிருந்து தப்பித்து வெளியில் வந்துள்ளார்.

இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ராசாபாளையம் சேர்ந்த விக்கி, அண்ணா நகர் சேர்ந்த வேலு உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News