உள்ளூர் செய்திகள்

பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவர் தற்கொலை

Published On 2023-01-21 04:11 GMT   |   Update On 2023-01-21 04:11 GMT
  • அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தரணியை உடனடியாக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
  • பின்னர் உயர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தரணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

ஈரோடு:

சென்னிமலை அருகே உள்ள மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (45). மூங்கில் கடை வைத்துள்ளார். இவரது மகன் தரணி (17). இவர் சென்னிமலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் தரணி அங்கு படிக்க விருப்பம் இல்லை என கூறியதையடுத்து அவரது தந்தை அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தரணியை சேர்த்தார். ஆனால் அங்கும் தரணி சரியாக பள்ளிக்கு செல்லாமல் செல்போனில் விளையாடி வந்துள்ளார். இதை அவரது பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று காலையில் தரணி வாந்தி எடுத்துள்ளார். இது குறித்து பெற்றோர் விசாரித்தனர். அப்போது தான் எலிபேஸ்ட் (விஷம்) தின்று விட்டதாக கூறியுள்ளார்.

இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தரணியை உடனடியாக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தரணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News