உள்ளூர் செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் பயணி மாரடைப்பால் மரணம்

Published On 2022-11-12 14:26 IST   |   Update On 2022-11-12 14:26:00 IST
  • மராட்டிய மாநிலம் புனேவைச் சேர்ந்தவர் டைட்டல் மேத்தா.
  • பயணிகள் விமானத்தில், அவருடைய சொந்த ஊரான புனே செல்ல விருந்தாா்.

ஆலந்தூர்:

மராட்டிய மாநிலம் புனேவைச் சேர்ந்தவர் டைட்டல் மேத்தா (வயது 61). இவர் மங்களூரில் இருந்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், நேற்று இரவு 11.15 மணிக்கு சென்னை உள்நாட்டு விமானநிலையம் வந்தார்.

அதன் பின்பு அவா், இன்று அதிகாலை 3.15 மணிக்கு, சென்னையில் இருந்து புனே செல்லும் மற்றொரு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், அவருடைய சொந்த ஊரான புனே செல்ல விருந்தாா். அதிகாலை 2.45 மணிக்கு திடீரென அவர் மாரடைப்பால் மயங்கி கீழே விழுந்து இறந்தார்.

Similar News