உள்ளூர் செய்திகள்

கதிர்வேட்டில் திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் லயன் டி.ரமேஷ் தலைமையில் பாதயாத்திரை

Published On 2022-08-12 17:00 IST   |   Update On 2022-08-12 17:00:00 IST
கதிர்வேட்டில் மாவட்ட தலைவர் லயன் டி.ரமேஷ் தலைமையில் மாமன்ற உறுப்பினர் சங்கீதாபாபு முன்னிலையில் பாதயாத்திரை நடைபெற்றது.

பூந்தமல்லி:

திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் 75 -வது சுதந்திர தின பவளவிழாவை முன்னிட்டு சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் 75 கிலோமீட்டர் பாதயாத்திரை கடந்த 9 - ந்தேதி மாதவரத்தில் துவக்கி வைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து 2-வது நாளாக கதிர்வேட்டில் மாவட்ட தலைவர் லயன் டி.ரமேஷ் தலைமையில் மாமன்ற உறுப்பினர் சங்கீதாபாபு முன்னிலையில் பாதயாத்திரை நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் அருணாசலம், சாந்தகுமார், தரணிபாய், ரவி, ஏ.டி.கிருஷ்ணமூர்த்தி, கபிலன், காமராஜ், புழல் குபேந்திரன் மற்றும் வட்டார, நகர, சர்க்கிள் தலைவர்கள் என்.வெங்கடேசன், ஏ.பி.சங்கர், ஆர்.வெங்கடேசன், எம்.சந்திரசேகர், ஏ.நித்தியானந்தம், எஸ்.கோபி, ஜெயராஜ், கவியரசன், பாபு, அமீத் பாபு, விஸ்வநாதன், சேதுபதி, மூர்த்தி, மணிகண்டன், சாந்தாராமன், சிவசங்கரன், சேகர், மாவட்ட நிர்வாகிகள் அச்சுதன், கிரிதரன், ஜான்பாஸ்கோ, மாரி, ராஜீவ்காந்தி, ரங்கநாயகி, லட்சுமி, பாபுராம், குமார், கணேசமூர்த்தி, ஆர்.எம்.தாஸ், தீனாள், எஸ்.ராஜீ, தீனதயாளன், வேல்முருகன், ரவிவளவன், கலையரசன், ஜிகா(எ)விக்ரம், இக்பால்பாஷா உள்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Similar News