உள்ளூர் செய்திகள்

சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கு: கைதான மேலும் ஒரு பெண் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

Published On 2023-11-25 03:51 GMT   |   Update On 2023-11-25 03:51 GMT
  • தொடர் குற்றங்களின் அடிப்படையில் 4 பேர் மீது மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
  • வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பானு மீதும் தற்போது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.

திருச்சி:

திருச்சி பாலக்கரை கீழப்புதூரில் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் கோட்டை அனைத்து மகளிர் போலீசார் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர். அப்போது சிறுமிகளை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது உறுதி செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து அங்கே வீடு வாடகைக்கு எடுத்து சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக பாலக்கரை துரைசாமி புரத்தை சேர்ந்த பானு (வயது 38 ) மற்றும் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் தொடர் குற்றங்களின் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரவிக்குமார், அசோக், அபி நிஷா, பானுப்பிரியா ஆகிய 4 பேர் மீது மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பானு மீதும் தற்போது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. தொடர் விசாரணையில் அவர் சிறுமிகளை வற்புறுத்தி பாலியல் தொழிலில் தொடர்ந்து ஈடுபடுத்தி வந்தவர் என கோட்டை அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர், மாநகர போலீஸ் கமிஷனருக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையின் அடிப்படையில் மாநகர போலீஸ் கமிஷனர் காமினி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பானு மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். பின்னர் அந்த ஆணையை சிறையில் இருக்கும் பானுவிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News