உள்ளூர் செய்திகள்

மணல் கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை அதிகாரிகள் எச்சரிக்கை

Published On 2023-09-16 06:37 GMT   |   Update On 2023-09-16 06:37 GMT
  • இருசக்கர வாகனங்கள், லாரிகள், படகுகள் மூலம் எடுத்து செல்லுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
  • பொதுப் பணித்துறை, காவல்துறை, வனத்துறை, போக்கு வரத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பொன்னேரி:

பொன்னேரியில் கனிம வளம் குறித்த ஆய்வு கூட்டம் பொன்னேரி சப்-கலெக்டர் ஐஸ்வர்யா தலைமையில் தாசில்தார் மதியழகன் முன்னிலையில் நடை பெற்றது.

கூட்டத்தில் அனுமதிக்கப்படாமல் இரவு நேரங்களில் சவுடு மண் மற்றும் ஆற்று மணல், கடல் மணல் ஆகிய கனிம வளங்களை இருசக்கர வாகனங்கள், லாரிகள், படகுகள் மூலம் எடுத்து செல்லுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த விசயத்தில் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொன்னேரி தாசில்தார் மதியழகன் தெரிவித்தார். அதன் பின் திருவிழாக்கள் மற்றும் இறுதி ஊர்வலம் நடைபெறும் போது வாகன ஓட்டிகளுக்கு பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் பட்டாசு வெடிக்க வேண்டும் என பொது மக்களுக்கு அரசு அதிகாரிகள் அறிவுரை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் துணை தாசில்தார் செந்தில், வருவாய் துறை, பொதுப் பணித்துறை, காவல்துறை, வனத்துறை, போக்கு வரத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News