உள்ளூர் செய்திகள்

3 பெண் குழந்தைகளுக்கு குளிர்பானத்தில் அரளி விதை கலந்து கொடுத்து தற்கொலைக்கு முயன்ற தாய்

Published On 2023-08-26 13:20 IST   |   Update On 2023-08-26 13:20:00 IST
  • கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சனை ஏற்பட்டது.
  • தற்கொலை குறித்து காரிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சேலம்:

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள மின்னாம்பள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட செல்லியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் டெல்லி பாபு. இவரது மனைவி நித்யா (23) இவர்களுக்கு சசிபிரியா (9) அஸ்விதாஸ்ரீ (8) மோகனா (5) என்ற 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக நித்யா அரளி விதைகளை அரைத்து குளிர்பானத்தில் தனது 3 குழந்தைகளுக்கும் கலந்து கொடுத்து விட்டு தானும் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதுபற்றி தெரியவந்ததும் 4 பேரையும் மீட்டு அம்மாப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் மேல் சிகிச்சைக்காக நித்யா சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து காரிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News