மீஞ்சூரில் நகைக்கடை பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
- பக்கத்து கடைக்காரர் நகை கடையின் சட்டர் உடைக்கப்பட்டது பார்த்து உரிமையாளருக்கு தகவல் அளித்தார்,
- நகை கடையில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை.
பொன்னேரி:
மீஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் விமல் (40) இவர் மீஞ்சூர் பஜார் வீதியில் பிரகாஷ் ஜுவல்லரி நடத்தி வருகிறார். நேற்றிரவு மர்ம நபர்கள் நான்கு பேர் கடையின் சட்டர் உடைத்து 15 சவரன் அடகு நகைகள் மற்றும் பத்தாயிரம் ரூபாய் ரொக்க பணமும் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.
வழக்கமாக வியாழக்கிழமை இரவு இந்த கடை மூடப்பட்டது வெள்ளிக்கிழமை விடுமுறை என்பதால் யாரும் கடைக்கு வரவில்லை. இதற்கிடையே இன்று பக்கத்து கடைக்காரர் கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டது பார்த்து உரிமையாளருக்கு தகவல் அளித்தார் அதன் அடிப்படையில் வந்த உரிமையாளர் கடை உடைக்கப்பட்டு உள்ளே நகைகள் திருடப்பட்டது என்பது தெரிய வந்ததை அடுத்து உடனே காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு காவல்துறை வந்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் கடையின் உள்ளே அமைந்துள்ள சிசிடிவி பார்த்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சிசிடிவி யில் நான்கு பேர் கடையில் சட்டரை உடைப்பது போல் உள்ளது இதில் இரண்டு பேர் கடையில் உள்ளே சென்று பொருள்களை திருடுகின்றனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து மீஞ்சூர் காவல்துறை விசாரணையில் நடத்தி வருகிறது.