உள்ளூர் செய்திகள்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3980 கனஅடியாக அதிகரிப்பு
- அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1500 கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
- கடந்த சில மாதங்களாக நீர்வரத்தை விட திறப்பு அதிகமாக இருந்தது.
மேட்டூர்:
கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 3 நாட்களாக விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று காலை விநாடிக்கு 1075 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 3980 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1500 கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. கடந்த சில மாதங்களாக நீர்வரத்தை விட திறப்பு அதிகமாக இருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து நேற்று காலை நீர்மட்டம் 101.16 அடி ஆனது.
இந்த நிலையில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதை அடுத்து இன்று காலை 8 மணிக்கு நீர்மட்டம் 101.30 அடியாக உயர்ந்தது.