உள்ளூர் செய்திகள்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,223 கன அடியாக அதிகரிப்பு
- மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
- நேற்று 103.51 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று காலை 103.50 அடியானது.
மேட்டூர்:
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைவாக உள்ளது.
ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 1,500 கன அடியாக நீடிக்கிறது. அதேசமயம் மேட்டூர்அணைக்கு நீர்வரத்து நேற்று விநாடிக்கு 1,211 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1,223 கன அடியாக அதிகரித்து உள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நேற்று 103.51 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று காலை 103.50 அடியானது.