உள்ளூர் செய்திகள்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1224 கன அடியாக அதிகரிப்பு
- மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 1212 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 1224 கன அதிகரித்துள்ளது.
- அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 1,500 கன அடியாக நீடிக்கிறது.
அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 1212 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 1224 கன அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 103.53 அடியில் இருந்து, 103.52 அடியாக சரிந்துள்ளது.