உள்ளூர் செய்திகள்
மேட்டுர் அணைக்கு நீர்வரத்து சரிவு
- மேட்டூர் அணைக்கு நேற்று 1165 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 992 கன அடியாக சரிந்தது.
- அணையில் இருந்து வினாடிக்கு1000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
மேட்டூர்:
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் ஒகேனக்கல் காவிரியில் மிதமான அளவு தண்ணீர் வருகிறது.
ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று 1165 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 992 கன அடியாக சரிந்தது. அணையில் இருந்து வினாடிக்கு1000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 103 .58 அடியாக இருந்தது. அணையில் 100 அடிக்கு மேல் தண்ணீர் உள்ளதால் அணை கடல் போல காட்சி அளிக்கிறது. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கிறார்கள்.