உள்ளூர் செய்திகள்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 841 கனஅடியாக சரிவு
- மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று விநாடிக்கு 992 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 841 கனஅடியாக சரிந்தது.
- அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர்:
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததாலும், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக, ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில், நேற்று விநாடிக்கு 1,200 கன அடியாக அதிகரித்தது.
இதே போல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று விநாடிக்கு 992 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 841 கனஅடியாக சரிந்தது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
தண்ணீர் வரத்தை காட்டிலும் திறப்பு அதிகமாக இருப்பதால், நேற்று 103.66 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று காலை 103.63 அடியாக குறைந்தது.