உள்ளூர் செய்திகள்

மறைமலைநகர், பொத்தேரி பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு

Published On 2023-01-07 16:39 IST   |   Update On 2023-01-07 16:39:00 IST
  • மகேந்திரா சிட்டி, சிங்கப்பெருமாள் கோவில் உள்பட பல்வேறு பகுதிகளில் அடிக்கடி மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போகும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
  • போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால் அடிக்கடி மோட்டார் சைக்கிள் திருடும் சம்பவம் நடக்கிறது.

மறைமலைநகர்:

தாம்பரம் மாநகர காவல் ஆணையகரத்திற்கு உட்பட்ட மறைமலைநகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட மறைமலைநகர், பொத்தேரி, காட்டாங்கொளத்தூர், செட்டிபுண்ணியம், மகேந்திரா சிட்டி, சிங்கப்பெருமாள் கோவில் உள்பட பல்வேறு பகுதிகளில் அடிக்கடி மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போகும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர்கள் மறைமலைநகர் போலீஸ் நிலையத்தில் தங்களது விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது குறித்து தொடர்ந்து புகார்கள் அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்:-

தினந்தோறும் மறைமலைநகர் போலீஸ் நிலையத்தில் உட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடப்படுகின்றன. போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால் அடிக்கடி மோட்டார் சைக்கிள் திருடும் சம்பவம் நடக்கிறது.

எனவே தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் உடனடியாக மறைமலைநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருடும் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை பிடிக்க தனி கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Similar News