உள்ளூர் செய்திகள்

மணவாளநகர் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது

Published On 2022-10-26 16:56 IST   |   Update On 2022-10-26 16:56:00 IST
  • மணவாளநகர் போலீசார் நேற்று முன்தினம் கடம்பத்தூர் ஒன்றியம் போளிவாக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
  • போளிவாக்கம் பகுதியை சேர்ந்த 4 பேர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

மணவாளநகர்:

திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் போலீசார் நேற்று முன்தினம் கடம்பத்தூர் ஒன்றியம் போளிவாக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு போளிவாக்கம் பகுதியை சேர்ந்த சேகர் (வயது 44), கோவிந்தராஜ் (44), லட்சுமிபதி (37), தணிகைவேல் (33) ஆகிய 4 பேர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து மணவாளநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கண்ட 4 பேரையும் கைது செய்தனர்.

Similar News