மாமல்லபுரத்தில் "கனமழை" வேரோடு சாய்ந்து விழுந்த காட்டு வாகை மரம்
- செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த மழை கொட்டுகிறது.
- கிராமங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் வாழை மரங்கள் சாய்ந்தது.
செங்கல்பட்டு:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த மழை கொட்டுகிறது.
மாமல்லபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது. நெம்மேலி, தேவநேரி, மாமல்லபுரம், வெண்புருஷம், கொக்கிலமேடு, சதுரங்கபட்டினம், புதுப்பட்டினம், உய்யாலிகுப்பம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை., கடம்பாடி, குழிப்பாந்தண்டலம், எச்சூர், திருக்கழுகுன்றம், பெருமாளேரி, மணமை உள்ளிட்ட விவசாய கிராமங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் வாழை மரங்கள் சாய்ந்தது.
மாமல்லபுரம் கல்பாக்கம் சாலையில் 40ஆண்டுகள் பழமையான மரம் வேறுடன் சாய்ந்து விழுந்தது. பேரூராட்சி ஊழியர்கள் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக மரத்தை வெட்டி அப்புறபடுத்தினர். தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பேரிடர் பாதுகாப்பு நடவடிக்கையாக மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகமும், தீயணைப்பு மீட்பு படையினரும் பொக்லைன், ஜெனரேட்டர், மரம் அறுக்கும் எந்திரம் பைப்பர் படகு, உள்ளிட்ட பாதுகாப்பு கருவிகளை தயார் நிலையில் வைத்து உள்ளனர்.