உள்ளூர் செய்திகள்
கொசஸ்தலை ஆற்றில் இருந்து மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தல்
- கொசஸ்தலை ஆற்றில் மணல் கடத்தப்படுவதாக திருவாலங்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தப்பியோடினார்.
திருத்தணி:
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அடுத்த எல்.வி.புரம் பகுதியில் செல்லும் கொசஸ்தலை ஆற்றில் மணல் கடத்தப்படுவதாக திருவாலங்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த வழியாக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் 2 கோணிப்பையுடன் ஒருவர் வந்தார். அவர் போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தப்பியோடினார். இதையடுத்து மோட்டார் சைக்கிளில் இருந்த கோணிப்பையை ஆய்வு செய்த போது ஆற்று மணல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மணலுடன் மோட்டார் சைக்கிளில் பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து மணல் கடத்திய நபரை தேடி வருகின்றனர்.