உள்ளூர் செய்திகள்

துக்க நிகழ்ச்சியில் தகராறு- வார்டு உறுப்பினர் மீது கத்தியால் வெட்டி தாக்குதல்

Published On 2022-12-24 14:05 IST   |   Update On 2022-12-24 14:05:00 IST
  • சத்தரை மேட்டு காலனியை சேர்ந்த சிவக்குமாருக்கும் இளஞ்செழியனுக்கும் தகராறு ஏற்பட்டது.
  • மப்பேடு போலீசார் தப்பி ஓடிய சஞ்சய், சிவக்குமார், விஜயகுமார் ஆகியோரை தேடி வருகிறார்கள்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் அடுத்த புதுமாவிலங்கை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் இளஞ்செழியன் (42). புதுமாவிலங்கை பஞ்சாயத்தில் 7-வது வார்டு உறுப்பினராக உள்ளார்.

நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள ராகவன் என்பவரின் தாயார் காலமானார். இந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இளஞ்செழியன் சென்றார்.

அங்கு மேளம் அடித்துக் கொண்டிருந்த சத்தரை மேட்டு காலனியை சேர்ந்த சிவக்குமாருக்கும் இளஞ்செழியனுக்கும் தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் இளஞ்செழியன் மோட்டார் சைக்கிளில் வரும்போது அவரை வழிமறித்த சிவகுமார், அவரது மகன் சஞ்சய் மற்றும் விஜயகுமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து இளஞ்செழியனை கத்தியால் தலை மற்றும் உடலில் வெட்டியும் உருட்டு கட்டையாலும் தாக்கியும் கொலை மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக மப்பேடு போலீசார் தப்பி ஓடிய சஞ்சய், சிவக்குமார், விஜயகுமார் ஆகியோரை தேடி வருகிறார்கள்.

Similar News