உள்ளூர் செய்திகள்
கீழ்ப்பாக்கத்தில் போலீஸ்காரர் வைத்திருந்த ரூ.1 லட்சம் பணம் திருட்டு
- அறையில் வைத்திருந்த ரூ.1 லட்சம் பணம் திருட்டு போய் உள்ளது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
சென்னை:
சென்னை கீழ்ப்பாக்கம் பட்டாலியன் பிரிவில் காவலராக பணிபுரிந்து வருபவர் அருண். இவர் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையில் வைத்திருந்த ரூ.1 லட்சம் பணம் திருட்டு போய் உள்ளது. இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசில் அவர் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.