உள்ளூர் செய்திகள்

கேரளா தொழிலாளி படுகொலை- 2 பேர் கைது

Published On 2023-03-21 17:05 IST   |   Update On 2023-03-21 17:05:00 IST
  • வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த அப்துல்காதர் மற்றும் அஜித் ஆகிய 2 பேரும் சேர்ந்து கத்தியால் ருக்மான்அலியை குத்தி கொன்று விட்டு தப்பி ஓடினர்.
  • விடுதியில் தங்கி இருந்த அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கம்பம்:

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளி பஸ்நிலைய பின்புறத்தில் தனியார் விடுதியுடன் கூடிய மதுபான கூடம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.

இது குறித்து கிடைத்த தகவலின்பேரில் குமுளி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அவருடன் வந்த நபர்கள் யார் என்பது குறித்தும் விசாரித்தனர். இதில் கொலை செய்யப்பட்டவர் குமுளி ரோசாப்பூகண்டம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ருக்மான்அலி (வயது40) என தெரிய வந்தது.

இவர் சம்பவத்தன்று தனது நண்பர்களான தேனி மாவட்டம் கம்பம் தாத்தப்பன்குளத்தை சேர்ந்த அலியார் மகன் அப்துல்காதர் (23), குமுளி ரோசாப்பூகண்டத்தை சேர்ந்த மணிமாறன் மகன் அஜித் (22) ஆகியோருடன் நீண்ட நேரம் மதுபானம் குடித்து விட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த அப்துல்காதர் மற்றும் அஜித் ஆகிய 2 பேரும் சேர்ந்து கத்தியால் ருக்மான்அலியை குத்தி கொன்று விட்டு தப்பி ஓடினர். அங்கிருந்து யாருக்கும் தெரியாத வகையில் விடுதியில் தங்கி இருந்த அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News