உள்ளூர் செய்திகள்
அதிமுக சார்பில் கந்த சஷ்டி விழா- ஆறாம் நாள் இன்று ஆயிரம் பேருக்கு அன்னதானம்
- அதிமுக சார்பில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் வழங்கினார்.
- பொன்னேரி நகராட்சி துணைத் தலைவர் விஜயகுமார் முன்னாள் தலைவர் சங்கர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
பொன்னேரி:
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் கந்த சஷ்டி விழாவின் ஆறாம் நாள் இன்று ஆயிரம் பேருக்கு அன்னதானம்.
திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் பலராமன் வழங்கினார். பொன்னேரியில் உள்ள அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயத்தின் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான இன்று நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டார்.
பின்னர் நகர செயலாளர் செல்வகுமார் ஏற்பாட்டில் நடைபெற்ற அன்னதான விழாவில் கலந்து கொண்டு சுமார் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மீஞ்சூர் ஒன்றிய கழக செயலாளர் நாலூர் முத்துக்குமார் பொன்னேரி நகராட்சி துணைத் தலைவர் விஜயகுமார் முன்னாள் தலைவர் சங்கர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.