உள்ளூர் செய்திகள்
காஞ்சிபுரத்தில் உரிய ஆவணங்களின்றி ஆட்டோக்களை இயக்கிய டிரைவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம்
- மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் எதிரே வாகன சோதனையில் ஈடுபட்டார்.
- டிரைவர்களிடம் விசாரணை நடத்தியபோது உரிய ஆவணங்களின்றி 7 ஆட்டோக்களை பறிமுதல் செய்து ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் நகரில் இயங்கும் ஆட்டோக்கள் போக்குவரத்து நெரிசலுக்கு பெரிதும் இடையூறு ஏற்படுத்துவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி அறிவுரையின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன் உத்தரவின் பேரில் மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் எதிரே திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டார்.
அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோக்களை நிறுத்தி உரிய ஆவணங்கள் உள்ளதா? என அதன் டிரைவர்களிடம் விசாரணை நடத்தியபோது உரிய ஆவணங்களின்றி 7 ஆட்டோக்களை பறிமுதல் செய்து ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.