உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரத்தில் மோட்டார் சைக்கிள் தொடர் திருட்டால் பொதுமக்கள் அச்சம்

Published On 2023-01-21 12:15 IST   |   Update On 2023-01-21 12:15:00 IST
  • இருசக்கர வாகனத்தை வீட்டுக்கு வெளியே விட்டு சென்று பின்பு திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் திருடப்பட்டிருந்தது.
  • காஞ்சிபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.


காஞ்சிபுரத்தில் கடந்த சில மாதங்களாக வீடுகளில் வெளியே விட்டு செல்லப்படும் இருசக்கர வாகனங்களை நோட்டமிட்டு திருடி செல்லும் சம்பவம் அரங்கேறி வருகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 44-வது வார்டு வேதாச்சலம் நகர் பகுதியில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை வீட்டுக்கு வெளியே விட்டு சென்று பின்பு திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் திருடப்பட்டிருந்தது. இது குறித்து காஞ்சிபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அங்கு இருக்கக்கூடிய சி.சி.டி.வி. காட்சிகளை பார்த்த போது 2 இளைஞர்கள் அப்பகுதியை நோட்டமிட்டு சென்று வந்துள்ளனர்.

பின்னர் வீட்டுக்கு வெளியே விடப்பட்ட மோட்டார் சைக்கிள் வாகனத்தை திருடி செல்லும் சி.சி.டி.வி. காட்சி சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. தொடரும் இருசக்கர வாகன திருட்டால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு உடனுக்குடன் குற்றவாளிகளை கண்டுபிடித்து சிறையில் அடைக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News