காஞ்சிபுரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் மாற்றுத்திறனாளி பலி
- படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகா, ஆனம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன. இவரது மகன் அருண்குமார் (வயது 25). மாற்றுத்திறனாளி. எலெக்ட்ரிகல் வேலை செய்து வந்தார்.
இவர் கடந்த 21-ந்தேதி ஆனம்பாக்கத்தில் இருந்து காஞ்சிபுரம் செல்வதற்காக உத்திரமேரூர் சாலையில் தன்னுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்தியேகமான மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
மேல்பேரமநல்லூர் அருகே சாலை வளைவில் திரும்பும்போது, எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அருண்குமார் சிசிக்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து மாகரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.