உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் டிஸ்சார்ஜ் செய்வதில் நோயாளியுடன் செவிலியர் மோதல்

Published On 2022-10-26 12:58 IST   |   Update On 2022-10-26 12:58:00 IST
  • காஞ்சிபுரத்தில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது.
  • உத்திரமேரூரில் உள்ள வட்டாசியர் அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருபவர் தாட்சாயிணி.

காஞ்சிபுரத்தில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு தினந்தோறும் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாகவும், 500-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் உடல் நலக்குறைவால் சிகிச்சைபெற்ற அரசு பெண் ஊழியர் ஒருவரிடம் டிஸ்சார்ஜ் செய்வதில் ஏற்பட்ட தகராறில் ரூ. 500 கேட்டு செவிலியர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்திரமேரூரில் உள்ள வட்டாசியர் அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருபவர் தாட்சாயிணி. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பழைய பிரசவ வார்டின் 2-வது மாடியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்ததால் அவரை டிஸ்சார்ஜ் செய்வதாக பரிசோதித்த டாக்டர்கள் கூறி இருந்ததாக தெரிகிறது. ஆனால் அங்கு பணியில் இருந்த செவிலியர் ஒருவர் தாட்சாயினியிடம் டிஸ்சார்ஜ் பற்றி எதுவும் தெரிவிக்க வில்லை. மேலும் அவருக்கு மருந்து, மாத்திரை எதுவும் கொடுக்க வில்லை என்று தெரிகிறது. இதுபற்றி செவிலியரிடம் கேட்டபோது சரிவர பதில் கூறாமல் இருந்தார். மேலும் அவர், என். ஜி. ஓ. பார்ம் அளித்தால்தான் டிஸ்சார்ஜ் செய்வேன் என தாட்சாயிணியிடம் தெரிவித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் ரூ.500 பணம் கொடுத்தால் டிஸ்சார்ஜ் செய்வதாக கூறினார். இதனால் அரசு ஊழியர் தாட்சாயிணி மிகவும் மனவேதனை அடைந்தார். சிகிச்சைக்கு வந்த நோயாளியிடம் செவிலியரின். இந்த செயல் அனைவரையும் அதிர்ச்சி அடையசெய்து உள்ளது.

Similar News