உள்ளூர் செய்திகள்
காஞ்சிபுரத்தில் பிச்சை எடுத்த 6 சிறுமிகள் மீட்பு- போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
- 6 சிறுமிகள், சிறுவனை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அஞ்சாலட்சுமி தலைமையிலான போலீசார் மீட்டனர்.
- குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
காஞ்சிபுரம் பஸ் நிலையம், இரட்டை மண்டபம், மூங்கில் மண்டபம் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் பிச்சை எடுத்து வந்த 6 சிறுமிகள், சிறுவனை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அஞ்சாலட்சுமி தலைமையிலான போலீசார் மீட்டனர்.
பின்னர் அவர்களை காஞ்சிபுரத்தில் உள்ள அரசு பெண் குழந்தைகள் காப்பகத்திலும், கிருகம்பாக்கத்தில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.