உள்ளூர் செய்திகள்
மக்கள் நீதி மய்யம் தொழில் முனைவோர் அணி ஒருங்கிணைப்பாளராக ஜான்சன் நியமனம்- கமல்ஹாசன் அறிவிப்பு
- ஜான்சன், கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
- ஜான்சனுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழில் முனைவோர் அணி மாநில ஒருங்கிணைப்பாளராக கன்னங்குளத்தை சேர்ந்த டி.ஜான்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இவரை நியமித்துள்ளார். இதற்காக ஜான்சன், கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். புதிய பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ள ஜான்சனுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.