உள்ளூர் செய்திகள்
கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய ஊழியர் தற்கொலை
- கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
கல்பாக்கத்தை சேர்ந்தவர் யுவராஜ், (வயது.50). இவர் கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கும், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் கோபம் அடைந்த அவரது மனைவி நேற்று முன்தினம் அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மன உைளச்சலில் இருந்து வந்த யுவராஜ் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கல்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.