உள்ளூர் செய்திகள்

ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் இரும்பால் ஆன நங்கூரம் கண்டுபிடிப்பு

Published On 2023-05-07 07:58 GMT   |   Update On 2023-05-07 07:58 GMT
  • தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.
  • முதல் கட்டப்பணியாக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் கடந்த ஆண்டு அகழாய்வு பணிகள் நடந்தது.

செய்துங்கநல்லூர்:

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. அதன் முதல் கட்டப்பணியாக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் கடந்த ஆண்டு அகழாய்வு பணிகள் நடந்தது. இந்த பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் பணியில் கிடைத்த பொருட்களை ஆவணப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

ஆவணப்படுத்தும் பணியின்போது ஒரு முதுமக்கள் தாழி பக்கவாட்டில் இரும்பால் ஆன 2 அடி உயரம் கொண்ட நங்கூரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . இது ஆய்வாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த ஆதிச்சநல்லூருக்கும், கடல் சார் வணிகத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News